மாநகர (கிராம) நிர்வாக அலுவலகம் :
இந்த மாநகர நிர்வாக அலுவலகம் மாநகரத்தின் மையப்பகுதியில் மையம் கொண்டுள்ளது இது வீரகேரளம் புதூர் தாலுகாவை சேர்ந்து செயல்படுகிறது அலுவலகம் என்றால் பரபரப்பு நிறைந்து ஒரே இரைச்சலுடன் காணப்படும் ஆனால் இந்த மாநகரின் நிர்வாக அலுவலகம் சத்தம் இன்றி சாந்தமாக காணப்படும் இந்த கருவந்தா மாநகர் ஒரு குறுவட்டமாக செயல்பட்டு வருகிறது இதன் கீழ் கீழக்கலங்கல் ,மேலக்கலங்கல் , அச்சங்குன்றம் போன்ற கிராமங்கள் நம் மாநகரோடு இணைக்கபெற்றுள்ளது வேதனையான விஷயம் என்னவென்றால் ஆர்.ஐ அலுவலகம் சம்மந்தமே இல்லாமல் பரங்குன்றாபுரத்தில் இயங்கி வருகிறது.........
ஊர் பொது குளம்::
இது ஊரின் பொதுக்குளம் என்றும் ஊரணி என்றும் அன்போடு அழைக்கப்படும் இரு நான்கு புறமும் கறைகள் மிக வலிமையான தோற்றத்தோடு காட்சியளிக்கும் முன்னொரு காலத்தில் இது தான் கருவந்தா மாநகரின் நீச்சல் குளமாக இருந்ததாம் ... இதன் மேல் புறம் தார் சாலையும் கீழ்புறம் வண்டி தடம்(மண் பாதை) அமைந்து மேலும் அழகை மெருக்கூட்டுவது போல் காட்சியளிக்கும் இதன் கரையில் கரையடி மாடசாமி அமர்ந்து வருவோரை காத்து வருகிறது இந்த கோவிலை பற்றி விரிவாக இன்னொரு பதிவில் காண்போம் இந்த ஊரணியின் தடுப்பணை வடக்கு பக்கம் மிக சரியான அளவில் திடமாக அமைக்கப்பட்டுள்ளது இந்த குளம் பற்றி நிறைய இருக்கு இப்ப வேணாம் அப்ரம் பாக்கலாம்...
பாலர் பள்ளி ::
இது தான் பாலர் பள்ளி இது காலையில் உருண்டையுடன் ஆரம்பிக்கிறது இங்கு சுமார் 25 குழந்தைகளை பண்போடு அரவணைத்து கல்வியை கற்று கொடுத்து வருகிறார்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இந்த பள்ளியில் தான் கொடுப்பார்கள் இங்கு பல நல்ல திட்டங்கள் செயல்ப்பட்டு வருகிறது காலை சுமார் 7 மணிக்கு உருண்டை கொடுப்பார்கள் உருண்டை என்றவுடன் தவறாக எண்ணாதீர்கள் சத்துணவு உருண்டை குழந்தைகள் மற்றும் கர்பிணி பெண்களுக்கு மட்டும்...



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக