தொழில் முன்னேற்றம் அடைய போக்குவரத்து அவசிய தேவையாய் உள்ளது நமது மாநகரின் அருகில் இருக்கும் பேரூராட்சி தான் சுரண்டை
பெரும்பாலானா மக்கள் இங்கே வந்து செல்கின்றனர் சுரண்டையில் கிடைக்காத பொருளே இல்லை என்று சொல்லலாம் அந்த சுரண்டை நமது மாநகரில் இருந்து சுமார் 12 கீலோ மீட்டர் தொலைவில் உள்ளது சுரண்டைக்கு செல்ல நமது மாநகரில் இருந்து வழிதடங்கள் 21,18,302,2,5Ex, மற்றும்
இரண்டு PKM சிற்றுந்துகளும் உள்ளன ஒவ்வொரு அரைமணி நேர இடைவேளைக்கும் ஒரு பேரூந்து சுரண்டை நோக்கி செல்லும் .
அடுத்து அணைவரும் பெரிதும் போய் வருவது ஆலங்குளம்
இது நமது மாநகரில் இருந்து சுமார் 15 கீலோ மீட்டர் தொலைவில் உள்ளது நமது மாநகரையும் ஆலங்குளத்தையும் இணைப்பதற்கு வழிதடங்கள் 18,129,5c,பேரூந்துகள் உள்ளன ... என்னதான் வாகன வசதிகள் இருந்தாலும் சாலை இரு முக்கிய சாரம்சமாக விளங்குகிறது நமது மாநகரின் உள்ளே இப்போது தார் ரோடு கிடையாது எங்கு பார்த்தாலும்
சிமிண்ட் சாலைகள் தான் மேலும் ஊருக்கு வெளியே இப்போது தான் புது தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது இப்போது குண்டு குளிகளெல்லாம் நிரப்ப பட்டு படு ஜோராக ஜொலிக்கிறது நம் சாலைகள் மேலும் அத்தியாவசிய தேவைக்காக மூன்று சக்கர ஊர்திகளும் நான்கு சக்கர ஊர்திகளும் எப்போதும் தயார் நிலையில் பேரூந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் இதனை பற்றி வரும் பதிவுகளில் விரிவாக எழுதலாம் என எண்ணியுள்ளேன் என்றும் அன்புடன் ஷாஜஹான் சார்லஸ்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக