பக்கங்கள்

வியாழன், 19 செப்டம்பர், 2013

Karuvantha City மாநகரின் மக்கள் தொகை

மாநகரின் மக்கள் தொகை பற்றி:
கருவந்தா மாநகர் 2010 கணக்கின் படி 1818 வீடுகளை கொண்டும் 6821 மக்களை கொண்டு செல்வ செழிப்போடு வளர்ந்து வரும் ஒரு அழகான மாநிலம் அல்லது நாடு ஆகும்.
இந்த 6821 மக்களில் 3399 ஆண் மக்களும் 3422 பெண் மக்களும் தங்களின் பங்களிப்பை மாநகருக்கு அளித்து வருகிறார்கள் . 0 முதல் 6 வயது வரையாண குழந்தைகளின் எண்ணிக்கை 717 இதில் 350 ஆண் குழந்தைகளும் 367 பெண்குழந்தைகளும் உள்ளனர் . எழுத படிக்க தெரிந்தவர்களின் எண்ணிக்கை 4647 இதில் 2602 ஆண்களும் 2045 பெண்களும் உள்ளனர். எழுத படிக்க தெரியாதவர்களின் எண்ணிக்கை 2174 இதில் ஆண்கள் 797 பெண்கள் 1377 பேர்களும் உள்ளனர். வேலைக்கு செல்பவரின் எண்ணிக்கை 3787 இதில் 1954 ஆண்களும் 1833 பெண்களும் உள்ளனர் . வேலைக்கு செல்லாதவர்களின் எண்ணிக்கை 3034 இதில் 1445 ஆண்களும் 1589 பெண்களும் உள்ளனர் இது நமது தாலுகாவிலிருந்து பெறப்பட்டது ...

போக்குவரத்து ::

தொழில் முன்னேற்றம் அடைய போக்குவரத்து அவசிய தேவையாய் உள்ளது நமது மாநகரின் அருகில் இருக்கும் பேரூராட்சி தான் சுரண்டை
பெரும்பாலானா மக்கள் இங்கே வந்து செல்கின்றனர் சுரண்டையில் கிடைக்காத பொருளே இல்லை என்று சொல்லலாம் அந்த சுரண்டை  நமது மாநகரில் இருந்து சுமார் 12 கீலோ மீட்டர் தொலைவில் உள்ளது சுரண்டைக்கு செல்ல நமது மாநகரில் இருந்து வழிதடங்கள் 21,18,302,2,5Ex, மற்றும்
இரண்டு PKM சிற்றுந்துகளும் உள்ளன ஒவ்வொரு அரைமணி நேர இடைவேளைக்கும் ஒரு பேரூந்து சுரண்டை நோக்கி செல்லும் .
அடுத்து அணைவரும் பெரிதும் போய் வருவது ஆலங்குளம்
இது நமது மாநகரில் இருந்து சுமார் 15 கீலோ மீட்டர் தொலைவில் உள்ளது நமது மாநகரையும் ஆலங்குளத்தையும் இணைப்பதற்கு வழிதடங்கள் 18,129,5c,பேரூந்துகள் உள்ளன ... என்னதான் வாகன வசதிகள் இருந்தாலும் சாலை இரு முக்கிய சாரம்சமாக விளங்குகிறது நமது மாநகரின் உள்ளே இப்போது தார் ரோடு கிடையாது எங்கு பார்த்தாலும்
சிமிண்ட் சாலைகள் தான் மேலும் ஊருக்கு வெளியே இப்போது தான் புது தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது இப்போது குண்டு குளிகளெல்லாம் நிரப்ப பட்டு படு ஜோராக ஜொலிக்கிறது நம் சாலைகள் மேலும் அத்தியாவசிய தேவைக்காக மூன்று சக்கர ஊர்திகளும் நான்கு சக்கர ஊர்திகளும் எப்போதும் தயார் நிலையில் பேரூந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் இதனை பற்றி வரும் பதிவுகளில் விரிவாக எழுதலாம் என எண்ணியுள்ளேன் என்றும் அன்புடன் ஷாஜஹான் சார்லஸ்

முக்கிய இடங்கள்

மாநகர (கிராம) நிர்வாக அலுவலகம் :

இந்த மாநகர நிர்வாக அலுவலகம் மாநகரத்தின் மையப்பகுதியில் மையம் கொண்டுள்ளது இது வீரகேரளம் புதூர் தாலுகாவை சேர்ந்து செயல்படுகிறது அலுவலகம் என்றால் பரபரப்பு நிறைந்து ஒரே இரைச்சலுடன் காணப்படும் ஆனால் இந்த மாநகரின் நிர்வாக அலுவலகம் சத்தம் இன்றி சாந்தமாக காணப்படும் இந்த கருவந்தா மாநகர் ஒரு குறுவட்டமாக செயல்பட்டு வருகிறது இதன் கீழ் கீழக்கலங்கல் ,மேலக்கலங்கல் , அச்சங்குன்றம் போன்ற கிராமங்கள் நம் மாநகரோடு இணைக்கபெற்றுள்ளது வேதனையான விஷயம் என்னவென்றால் ஆர்.ஐ அலுவலகம் சம்மந்தமே இல்லாமல் பரங்குன்றாபுரத்தில் இயங்கி வருகிறது.........


ஊர் பொது குளம்::

இது ஊரின் பொதுக்குளம் என்றும் ஊரணி என்றும் அன்போடு அழைக்கப்படும் இரு நான்கு புறமும் கறைகள் மிக வலிமையான தோற்றத்தோடு காட்சியளிக்கும் முன்னொரு காலத்தில் இது தான் கருவந்தா மாநகரின் நீச்சல் குளமாக இருந்ததாம் ... இதன் மேல் புறம் தார் சாலையும் கீழ்புறம் வண்டி தடம்(மண் பாதை) அமைந்து மேலும் அழகை மெருக்கூட்டுவது போல் காட்சியளிக்கும் இதன் கரையில் கரையடி மாடசாமி அமர்ந்து வருவோரை காத்து வருகிறது இந்த கோவிலை பற்றி விரிவாக இன்னொரு பதிவில் காண்போம் இந்த ஊரணியின் தடுப்பணை வடக்கு பக்கம் மிக சரியான அளவில்  திடமாக அமைக்கப்பட்டுள்ளது இந்த குளம் பற்றி நிறைய இருக்கு இப்ப வேணாம் அப்ரம் பாக்கலாம்...
பாலர் பள்ளி ::

இது தான் பாலர் பள்ளி இது காலையில் உருண்டையுடன் ஆரம்பிக்கிறது இங்கு சுமார் 25 குழந்தைகளை பண்போடு அரவணைத்து கல்வியை கற்று கொடுத்து வருகிறார்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இந்த பள்ளியில் தான் கொடுப்பார்கள் இங்கு பல நல்ல திட்டங்கள் செயல்ப்பட்டு வருகிறது காலை சுமார் 7 மணிக்கு உருண்டை கொடுப்பார்கள் உருண்டை என்றவுடன் தவறாக எண்ணாதீர்கள் சத்துணவு உருண்டை குழந்தைகள் மற்றும் கர்பிணி பெண்களுக்கு மட்டும்...

தொலை தொடர்பு



தொலை தொடர்பு
நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருப்பது இந்த தொலை தொடர்பு என்றால் மறுக்க முடியாத விடயமாகும் கருவந்தா மாநகரிலும் இந்த தொலை தொடர்பு பரந்து விரிந்து காணப்படுகிறது. நமது மாநகரில் வசிக்கும் 15 வயதுக்கு மேற்ப்பட்ட அனைவரிடமும் கைப்பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது தொலை தொடர்பை வழங்கும் நோக்கில் அலை பேசி டவர்கள் வானுயர்ந்து ஒரே இடத்தில் அமைந்துள்ளது . இங்கே தபால் நிலையமும் உள்ளது . கருவந்தா மாநகரில் மூண்று டவர்கள் உள்ளது ஏர்செல்,வோடாபோன், பி.எஸ்.என்.எல் இதில் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்டு ஏர்செல் நிறுவனமும் அதனை தொடர்ந்து வோடாபோன் நிறுவனமும் சிறப்பான சேவையை பொது மக்களுக்கு வழங்கி வருகிறது.. கருவந்தா மாநகர் தெங்காசி பகுதிக்கு உட்ப்பட்டு இருப்பதால் இதன் தொலை பேசி கோடு எண்கள் 04633 என்று உள்ளது
மேலும் ஊத்துமலையை மையமாக கொண்டு செயல் படுவதால் தொலைப்பேசி எண்ணின் முதல் மூன்று எண்கள் 247 என்று தொடங்கும்  இங்கே அலை கற்றைகள் மூலம் இயங்கும் வயர்லெஸ் போங்கள் பெரும்பான்மையான இல்லங்களில் விருந்தாளியாக வந்து குடும்பத்துடன் இணைந்து பங்களித்து வருகிறது சில தொலைபேசி எண்கள் 291 என்ற எண்ணின் தொடக்கதோடும் சில தொலைபேசி எண்கள் 294 என்ற ஆரம்பத்தை கொண்டும் செயல்பட்டு வருகிறது..........   தொடர்ந்து இணைந்திருங்கள் இந்த வலை பூவுடன் உங்கள் பெயரை மறாவாது பதிவு செய்து விட்டு செல்லுங்கள் ... என்றும் அன்புடன் ஷாஜஹான் சார்லஸ்

புதன், 18 செப்டம்பர், 2013

Karuvantha (கருவந்தா மாநகர்)

கருவந்தா மாநகர்
கருவந்தா பல அடுக்கு மாடிவீடுகளை கொண்டுள்ள ஊர்
 இங்கே பல தரப்பட்ட மக்கள் ஒற்றுமையாக வாழும் அழகான ஊர் கருவந்தா மாநகரில் சுமார் 5 (50) வார்டுகள் இருக்கிறது காலையில் எழுந்து பள்ளிக்கு செல்ல பேரூந்து நிலையத்தில் காத்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது பயப்படாதிங்க அவ்ளோ பேரும் விடுதியில் தங்கி படிக்க போய்ராங்க..காலையில் சுமார் 8:30 மணிமுதல் 10 மணிவரை ஆட்டோக்களும் டாடா சுமோக்களும் ஆம்னிகளும் டாடா மேஜிக்குகளும் அணிவகுத்து செல்லும்  ஆம் நமது மாநகர ஆண்மக்கள் வேலைக்கு செல்வார்கள் இந்த மாநகரில் அதிகமான மக்கள் விவசாயத்தை செய்து வருகிறார்கள் கடவுள் மழைக்கு விடுமுறை விடும் போது விவசாயிகள் மனம் தளறாது சாலை பணியாளர் வேலைக்கு சென்றுவிடுவார்கள் சில பேர் லைன் தோண்ட சென்று விடுவார்கள்... நமது மாநகரில் இப்போது மிகவும் பிரபல்யமாக இருப்பது கொத்தனார் தொழில் , ஜேசிபி ஆபரேட்டர் , டிரைவர் இளைஞர்கள் இப்போது இந்த மூண்று தொழிலில் தான் ஆர்வம் காட்டுகின்றனர் ... கருவந்தா மாநகரில் பிறந்து வளர்ந்து தன் படிப்பை முடித்து வேலைக்காக வெளியூர்,வெளிமாநிலம்,வெளிநாடு, வெளி கண்டம், வெளி உலகம் என்று பல்வேறு இடங்களில் பணிபுரிகிறார்கள் அவர்களின் திறமையையும் ஆற்றலையும் வியந்து வருகிறது இந்த தொழில்நுட்ப உலகம் ...
ஆண்கள் மட்டுமல்லாது பெண்கள் அணைவரும் பீடி சுற்றும் தொழிலில் இடுபட்டு வருகிறார்கள்... மாநகர மாணவர்கள் பல பேர் படிப்பிலும் , தொழிலிலும் சாதனை படைத்து வருகிறார்கள்...மாநகரின் அமைப்பும் அம்சமும் கன கச்சிதமாக கண்ணுக்கு அழகாக அமைந்துள்ளது... இறைவனின் இறக்கம் இருந்தால் எப்போதும் பசுமையாக காட்சியளிக்க மாநகரால் முடியும் அது விரைவில் நடக்கும் ...
என்றும் அன்புடன் ஷாஜஹான் சார்லஸ்

பரிசுத்த மத்தேயு ஆலயம்,கருவந்தா


நீங்கள் பார்த்து கொண்டிருப்பது பழைய ஆலயம் தான் ஆனால் எத்தனை ஆண்டுகள் சென்றாலும் யாராலும் மறக்க இயலாது இப்போது புதிய ஆலயத்தை கட்டி இரண்டு ஆண்டுகள் பிரதிஷ்ட்டை முடிந்த நிலையில் வானுயர்ந்து நிற்கிறது இந்த ஆலய கோபுரம் சுமார் ஒரு கோடி செலவில் இந்த
புதிய ஆலயத்தை கட்டி எழுப்பி உள்ளார்கள் ஊரின் உள்ளே வருவதற்கு முன்னே அதோ தெரியுது பார் கோபுரம் அது தான் எங்க ஊர் என்று பெருமைப்படும் வகையில் அமைந்துள்ளது இந்த ஆலயத்தினுள் பால்கனி வைத்து மிக பிரமாண்டமாக வடிவமைத்துள்ளார்கள் இதன் உள்ளே சென்றதும்
"பயப்படாதே உன் வேண்டுதல் கேட்க்கப்பட்டது " என்ற வசனம் வரும் எல்லோரையும் ஆறுதல் அடைய செய்யும் விதத்தில் இருக்கிறது . ஊரில் மின் தடை ஏற்படும் நேரங்களில் இதன் கோபுரத்தில் அமைந்துள்ள விளக்குகள் ஊரையே இருளில் இருந்து மீட்ப்பது போல் காட்சி அளிக்கிறது இதன் கோபுர உச்சியில் நின்று ஊரை படம் பிடிப்பதும் பார்ப்பதும் மனதுக்கு மகிழ்ச்சியையும் இதயத்துக்கு இனிமையான உணர்வையும் கொண்டு வரும். இதன் பிரதிஷ்ட்டை மே மாதம் நடைபெறும் புதுவருட பிறப்பு , கிறிஸ்மஸ் போன்ற விழாகாலங்களில் மிகவும் அழகான முறையில் கொண்டாட படும் . அந்த பழைய ஆலயம் இடிக்கும் போது அதன் கோபுரம் சாயும் போது அருகில் இருந்து அதனை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது அது இன்னும் என் கண்களை உருக்குகிறது அப்படி நடந்தது அதனை படமாக எடுத்து வைத்திருந்தேன் ஆனால் தொழில்னுட்ப கோளாறு காரணமாக அழிந்து விட்டது... போதும்னு நினைக்கிறேன் அய்யோ மறந்துட்டேன் என்றும் அன்புடன் ஷாஜஹான் சார்லஸ்

புனித சவேரியார் ஆலயம்,karuvantha

 ஆலயத்தின் திருவிழா முன்பு சூன் மாதத்தில் நடந்து வந்தது இது பள்ளி மாணவ மணிகளுக்காக இப்போது மே மாதத்தில் நடந்து வருகிறது இந்த ஆலய திருவிழாவின் போது ஜாதி மத பேதமின்றி அனைவரும் சமத்துவ உணர்வோடு பங்குகொள்வர் இதன் திருவிழாவின் போது சாலைகள் தோறும் சேலைகளாய் தோன்றும் அவ்ளோ கூட்டம்னு சொல்ல வந்தேன் ... இது ஒரு கத்தோலிக்க திருச்சபை இது ஊத்துமலை பங்கில் செயல்பட்டு வருகிறது
திருவிழாவின் போது சப்பரங்கள் இழுப்பார்கள் முன்பெல்லாம் உப்பு மிளகு சப்பரத்தின் மீது போடுவார்கள் ஆனால் இப்போது தடை செய்துவிட்டார்கள் விழாவின் போது ஊர் மக்கள் அணைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடுவார்கள் .. யாருக்காவது பாலுண்ணி இருந்தால் திருவிழாவின் போது சப்பரத்தில் உப்பு மிளகு போட்டால் சரியாகும் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன் இந்த கோவில் அமைப்பு வியக்கும் வகையில் அமைந்துள்ளது பெரிய மைதானம் கோவில் முன்பு இங்கே பல்வேறு நிகழ்சிகள் நடத்துவார்கள் திருவிழாவின் போது விளையாட்டு போட்டிகளும் நடத்தி இன்புற செய்வார்கள் இந்த ஆலயத்தினுள் இருக்கும் சிற்ப்பங்கள் வியக்கும் வகையில் அமைந்துள்ளது உள்ளே
சிலுவையில் தொங்குவது போல் உள்ள இயேசு கிறிஸ்துவின் உருவ அமைப்பு எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் உள்ளது.... இந்த வளாகத்திலே குழந்தை இயேசு பாலர் பள்ளி உள்ளது அங்கே சிறுவர்களுக்கு விளயாட்டுடன் கல்வியை போதித்து வருகிறார்கள் இன்னும் நிறைய இருக்கு இருப்பினும் என் கீ போர்டு சப்போர்ட் பண்ண மட்டைக்கு என் கை பட்டே வலியால் துடிக்குது அதனால சற்று ஒய்வு கொடுக்க ஆசைப்பட்டு இந்த பதிவை முடிக்கிறேன் என்றும் அன்புடன் ஷாஜஹான் சார்லஸ்

T.D.T.A நடுநிலை பள்ளி


நமது மாநகருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் இந்த பள்ளிகூடம் அமைந்துள்ளது


நான் படிக்கும் போது பழைய பள்ளிகூடம் தான் அது ஊருக்குள்ளே மெயின் ரோட்டில் இருந்தது விளையாட மைதானம் செல்ல வேண்டுமென்றால் தெற்கே அழைத்து செல்வார்கள் அதுவும் கடைசி நேர பிரிவில் அங்கே போய் சேர்ந்து எல்லோரையும் அமைதி படுத்துவதில் ஆசிரியர்கள் இருப்பார்கள் ஆனால் பாருங்க அவர்கள் அமைதிபடுத்தி விளையாட்டை தொடங்குவாங்க அதுக்குள்ள அந்த 4:10 மணியாயிரும் அப்ரம் என்ன வீட்டுக்கு போக வேண்டியது தான் ஆனால் இப்போது புதிய பள்ளிக்கூடம் பெரிய விளையாட்டு மைதானம்
முக்கிய அம்சம் பள்ளியின் முன்பே விளையாட்டு மைதானம் பள்ளியின் தோற்றம் அனைவரையும் மிரள வைப்பது போல் அமைந்துள்ளது மாணவர்கள் படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கி வருகிறார்கள் சில வாரங்களுக்கு முன்பு ஒரு மாணவனிடம் பேசும் போது நான் தெரிந்து கொண்ட விஷயம் அண்ணே நான் ஆலங்குளத்தில் சதுரங்கம் (செஸ்) விளையாட்டு போட்டியில் பங்கேற்க போகிறேன் என்றான் அப்போது என் மூழை சற்று விரிந்து சுருங்கியது ஏனென்றால் எனக்கு சதுரங்கம் என்றால் என்ன என்றே இப்போது தான் தெரிந்தது (இன்னும் விளையாட தெரியாது) ஆனால் நமது மாநகரில் அதுவும் நமது பள்ளியில் பயின்று ஒரு மாணவன் சதுரங்க போட்டியில் பங்கு கொள்கிறான் என்றால் பெருமைப்படவேண்டிய விஷயம் அத்தகைய கல்வியையும் விளையாட்டு பயிர்சியையும் பள்ளியில் ஆசிரியர் ஊக்குவிக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன் .. நாட்டில் ஏதாவது தேர்தல் அல்லது மாநகர தேர்தல்கள் யாவும் இப்பள்ளியிலே நடக்கிறது .. இது ஒரு அரசு உதவி பெரும் பள்ளியாகும்.........

முதல் பதிவு



முதல் பதிவு



கருவந்தா மாநகருக்கென்று தனியாக ஒரு வலைப்பக்கத்தை உருவாக்குவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது முதல் பதிவாக எதை பற்றி எழுவது என்று ஆழ்ந்து யோசிக்கும் போது என் கபாலத்தில் கணீர் என்று நினைவுக்கு வந்தது தெய்வங்கள் தான் ஆம் அவர்கள் நம்மை படைத்து பராமரித்து வருகிறார்கள் ஆகவே இந்த பதிவில் அவர்களை பற்றியும் அவர்கள் இருக்கும் புனித ஸ்தலங்களை பற்றியும் எழுதுகிறேன் .........

இது தான் கருவந்தா வின் அடையாளமாக இருந்தது இப்போது புதிய ஆலயத்தை கட்டிவிட்டார்கள் இந்த ஆலயத்தின் பெயர் பரிசுத்த மத்தேயு ஆலயம் .. இந்த ஆலயம் ஊத்துமலையை சேகரமாக கொண்டு செயல் பட்டு வருகிறது..
இதனை பற்றி வரும் பதிவுகளில் விரிவாக காண்போம்..

அடுத்து வினைகளை தீர்க்கும் விநாயகர் கருவந்தா மாநகரில் எண்ணற்ற விநாயகர் கோவில்கள் இருந்தாலும் இந்த விநாயகருக்கு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு மேலே கூறியது போல தான் இதனை பற்றி விரிவாக வரும் பதிவுகளில் காண்போம்...


இது காளியம்மன் முத்தாரம்மன் திருக்கோவில் இந்த கோவில் மேலே உள்ள விநாயகர் கோவிலுக்கு அருகில் உள்ளது இந்த ஆலயத்தில் காளியம்மனும் முத்தாரம்மனும் வீற்றிருந்து ஆசிகளை வழங்கி கொண்டிருக்கிறார்கள்

காளியம்மன் திருக்கோவில் இதனை புதுக்கோவில் கரடி கோவில்(கரையடி ) என்ற புனை பெயர்களால் அழைப்பார்கள்
இந்த கோவிலில் புதுப்பிக்கும் பணி நடை பெறுகிறது......

ஸ்ரீ சுடலை மாடசாமி கோவில் இதனை பெரிய கோவில் என்று புனை பெயருடன் அழைப்பார்கள்





நாகமுடி சாஸ்த்தா கோவில் இது ஊருக்கு தென் புறம் வயக்காட்டு பக்கம் அமைந்துள்ளது



மேலும் பல கோவில்கள் உள்ளன இருப்பினும் என்னிடம் புகைப்படம் இல்லை உங்களிடம் இருந்தால் அனுப்பவும் பதிவிடுகிறேன்.....
அன்புடன் ஷாஜஹான் சார்லஸ்