பக்கங்கள்

சனி, 21 ஜூன், 2014

State Bank of Karuvantha (ஸ்டேட் பாங்க் ஆப் கருவந்தா)

State Bank of Karuvantha (ஸ்டேட் பாங்க் ஆப் கருவந்தா): தற்போது நினைவில் விரைவில் நிஜமாகும்..........இமாலய சாதனையில் இமயத்தை தொட வந்துவிட்டது ஸ்டேட் பாங்க் ஆப் கருவந்தா வங்கி.....சலுகைகள் பலவற்றை சாதாரணமாய் சந்து பொந்துகளில் வசிப்பவர்கள் கூட பயன் பெறும் வகையில் அமைய பெற்ற கட்டமைப்பை உடையது தான் இந்த வங்கி....வங்கிகள் பல வாங்கிகளாய் (கொள்ளை) இருப்பதை கண்டு மனம் துவண்டு  போன உங்களுக்காகவே தொடங்க பட்டுள்ளது இந்த வங்கியின் சிறப்பம்சத்தை கண்டு சுவீஸ் வங்கி தனது மூட்டை முடிச்சை கட்ட துவங்கி விட்டதாக சற்று முன் அந்த வங்கியின் மேலாளர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியிட்டுள்ளார்....ஸ்டேட் பாங்க் ஆப் கருவந்தாவில் கணக்கு துவங்க வேண்டுமானல் சில கட்டுபாடுகளையும் விதிமுறைகளையும் வங்கியின் நிறுவனர் குழு விதித்துள்ளது கணக்கு துவங்கும் சந்தாதாரர் கருவந்தாவின் குடிமகனாக இருக்க வேண்டும் .... அதற்கான அடையாள சான்று அவசியம் தேவை.... கணக்கு துவங்க விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்பட்டு நீல அட்டை (அமெரிக்காவுக்கு பச்சை அட்டை கருவந்தாவிற்கு நீல அட்டை ) இணைக்க வேண்டும் கணக்கு  தொடங்கும் முன் வங்கி கணக்கிற்கென்று முன் பணம் ஏதும் செலுத்த தேவை இல்லை.......  வங்கியின் சேவை:ATM  சேவை::கருவந்தாவின் எந்த மூலையில் இருந்தாலும் உடனே பணம் எடுக்க வசதியாக ATM ஆங்காங்கே அமைக்க பட்டுள்ளது மாகணம் வாரியாக பல ATM Center களை அமைத்துள்ளது இந்த வகை ATM நிலையங்களில் சில்லைரையாகவும் எடுக்கும் படியாக அமைக்க பட்டுள்ளது........இங்கு வரும் உறுப்பினர்கள் பணம் எடுக்கும் போது பாதுகாப்பாக வீடு திரும்ப பாதுகாவலர்கள் உறுப்பினர்களின் வீடுவரை வந்து விட்டு செல்வர் ஆகவே உங்களுக்கும் உங்கள் பணத்திற்கும் பாதுகாப்பாக இருக்கும்....கணக்கு வைக்காத நபர்கள் உள்ளே செல்வதற்கு கூட அனுமதிப்பது இல்லை ....இந்த மாதிரியாண சேவைகளை உலகில் உள்ள எந்த நாட்டிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது....ஒரு நேரத்தில் ஒரு கோடிவரை பணம் எடுக்க இயலும்.... வங்கி கணக்கில் பணம் இல்லை என்றால் இதன் வாயிலாக கடன் வாங்கி கொள்ளலாம்... ஆனால் நிபந்தனைக்குட்பட்டு பணம் வழங்கப்படும்முக்கிய பிரமுகர்களின் ATM Card கள் உங்கள் பார்வைக்காக....    இந்த வகை ATM Card களை பயன்படுத்தி கருவந்தாவில் உள்ள வனிக நிலையங்களில் பொருள்கள் வாங்கிகொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது...கார்டுகள் தவற விட்டு விட்டால் தானகவே அறிந்து கொள்ளும் உறுப்பினரின் நடவடிக்கைகளை வைத்து புரிந்து கொள்ளும் தன்மை பெற்ற அதிநவீன தொழில்நுட்ப்பத்துடன் தயாரிக்க பட்டுள்ளதுகாசோலை::::: காசோலை பேப்பர்கள் மேலை நாட்டு தொழில்நுட்பத்தை பயன் படுத்தி தயாரிக்க படுகிறது ஒரு பேப்பரின் தயாரிப்பு செலவு ஆயிரம் ரூபாய் கணக்கு வைக்காத நபர்களின் கையொப்பம் இந்த பேப்பரில் பதிவு செய்ய இயலாது மீறி யாரவது முயற்சி செய்தால் தானாகவே கிழிந்து போகும் தன்மையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.....இந்த வங்கியின் நோக்கமே ஒவ்வொரு கருவந்தான்களும் (இந்தியன் மாதிரி கருவந்தான்)   பயன் பெறவேண்டும் அடிமட்ட குடிமகனும் பயனடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை தன்னகத்தே கொண்டு விரைவாக உயர்ந்து வருகிறது.....கணக்கு துவங்க மேலாளரை அனுகவும்.......